டெல்லியில் லாரி ஏறியதில் சாலையோரம் தூங்கிய 4 பேர் பலி


டெல்லியில் லாரி ஏறியதில் சாலையோரம் தூங்கிய 4 பேர் பலி
x

டெல்லியில் சாலையோரத்தில் தூங்கிகொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

புதுடெல்லி,

டெல்லியில் சீமாபுரியில் நள்ளிரவு 1.51 மணியளவில் டிடிசி டிப்போ ரெட்லைட்டைக் கடக்கும் போது, அடையாளம் தெரியாத வேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story