டெல்லி, பஞ்சாப், வடமேற்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்


டெல்லி, பஞ்சாப், வடமேற்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்
x

டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை கான முடிகிறது.

இந்த நிலையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் ஐந்து புள்ளிகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

மேலும், ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story