டெல்லியில் அடுத்த 2 மாதங்களில் 100 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்; கெஜ்ரிவால் உறுதி
டெல்லியில் அடுத்த 2 மாதங்களில் 100 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த 2 மாதங்களில் 100 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.புது டெல்லி,
இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்தும் இடத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார், அதில் முதல் கட்டமாக டெல்லியில் இன்று 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களைத் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
பேட்டரி மாற்றும் நிலையங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் முன்பு வேறு வேறாக இருந்தன. ஆனால் இவை இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11 நிலையங்களில் 73 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில், டெல்லியில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.
Related Tags :
Next Story