மக்களின் வாழும் உரிமையைப்பறிக்குமேயானால் அதற்கு பெயர் சர்வாதிகாரம் -ராகுல்காந்தி காட்டம்
அதிகாரத்தின் ஆணவம் மக்களின் வாழும் உரிமையைப்பறிக்குமேயானால் அதற்கு பெயர் தான் சர்வாதிகாரம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில்,
அதிகாரத்தின் ஆணவம் மக்களின் வாழும் உரிமையைப்பறிக்குமேயானால் அதற்கு பெயர் தான் சர்வாதிகாரம், கான்பூரில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த புல்டோசர் கொள்கை அரசின் முகமாக மாறி உள்ளது, இதை இந்தியா எப்போதும் ஏற்காது என கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அரசின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வீடு தீ பிடித்து எரிந்ததில் தாய், மகள் பலியான சம்பவம் குறித்து ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story