2013-ம் ஆண்டு முதல் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விசாரிக்க வேண்டும்-முன்னாள் மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தல்


2013-ம் ஆண்டு முதல் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விசாரிக்க வேண்டும்-முன்னாள் மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

பா.ஜனதா ஆட்சி முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், 2013-ம் ஆண்டு முதல் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:-

ஆர்.அசோக் பேட்டி

பெங்களூரு மாநகராட்சியில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் செய்த வளர்ச்சிப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரசார் குற்றம்சாட்டியிருந்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சியில் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய மாநில அரசு விசாரணை குழுக்களை அமைத்துள்ளது.

காங்கிரசார் சத்திய அரிச்சந்திரர்களாக இருந்தால், கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பணிகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். தான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.நீங்கள் என்ன பின்லேடன் ஆட்சி நடத்துகிறீர்களா?. அவர் ஜாமீனில் தான் வெளியே உள்ளார். இதை அவர் மறக்கக்கூடாது. ஊழலுக்கு எதிராக போர் தொடுத்துள்ளோம் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். இது பூதத்தின் வாயில் பகவத் கீதையை கேட்பது போல் உள்ளது.

எங்கள் மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது காண்டிராக்டர்கள் இந்த அரசு மீது 15சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இதற்கு காங்கிரசின் அரசின் பதில் என்ன?.டி.கே.சிவக்குமார் கமிஷன் கேட்கவில்லை என்றால் அவர் அதிகமாக நம்பும் அஜ்ஜய்யா கோவிலுக்கு என்று சத்தியம் என்ன மறுப்பது ஏன்?.

இவ்வாறு ஆர்.அசோக்

கூறினார்.


Next Story