நித்யானந்தாவின் சொரூபம் என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்தவருக்கு தர்ம-அடி


நித்யானந்தாவின் சொரூபம் என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்தவருக்கு தர்ம-அடி
x

நித்யானந்தாவின் சொரூபம் என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்தவருக்கு தர்ம-அடி விழுந்தது.

கார்வார்: ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சாமியாராக இருந்து வருபவர் நித்யானந்தா. சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன்னை நித்யானந்தாவின் சொரூபம் என்று ஒருவர் சுற்றித்திரிந்து தர்ம-அடி வாங்கிய சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா அச்சிவே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொரள்ளி என்ற கிராமத்தில் ஒருவர் நித்யானந்தா போல உடை அணிந்தும், அவரை போல தலை முடி வளர்த்து கொண்டும் கிராமத்திற்குள் சுற்றித்திரிந்து உள்ளார். மேலும் தன்னை நித்யானந்தாவின் சொரூபம் என்றும், தனது பெயர் சத்யானந்தா என்று கூறியும் பெண்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி அறிந்த பஜ்ரங்தள அமைப்பினர் அந்த நபரை பிடித்து தர்ம-அடி கொடுத்து உள்ளனர். அப்போது அவரது உண்மையான பெயர் சேகர் படகர் என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் நித்யானந்தாவின் பெயரை கூறி மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று சேகரிடம் பஜ்ரங்தள அமைப்பினர் எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.


Next Story