தார்வாரில் 4 நாட்கள் நடந்த வேளாண் கண்காட்சியில் 665½ குவிண்டால் விதைகள் விற்பனை
தார்வாரில் 4 நாட்கள் நடந்த வேளாண் கண்காட்சியில் 665½ குவிண்டால் விதைகள் விற்பனை ஆகியுள்ளது.
உப்பள்ளி;
தார்வாரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 4 நாட்களாக வேளாண் பொருட்கள் கண்காட்சி நடந்து வந்தது. இங்கு ஏராளமான விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் விற்பனையும் நடைபெற்றது.
4 நாட்கள் நடந்த இந்த வேளாண் கண்காட்சியில் ரூ.54¼ லட்சத்துக்கு 665½ குவிண்டால் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 15.37 லட்சம் பேர் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 5.97 லட்சம் பேர் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் பல்வேறு நிறுவனத்துக்கு சொந்தமான 10 டிராக்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளர்ப்பு நாய், பூனையின் அணிவகுப்பும் நடந்தது.
Related Tags :
Next Story