உடல்நலக்குறைவால் இறந்து உடல் உறுப்புகளை தானம்
உடல் உறுப்புகளை தானம் செய்த சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஒசகொப்பா கிராமத்தை சேர்ந்த சிறுமி காணவி கவுடா(வயது 17). கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காணவி கவுடா உயிரிழந்தார். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி டாக்டர்கள், சிறுமி காணவி கவுடாவின் கண்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவசை சிகிச்சை மூலம் எடுத்து தானமாக பெறப்பட்டது.
ஆனால் உடல் உறுப்புகளை தானம் செய்த சிறுமியின் பெற்றோருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதையறிந்த ராஜேகவுடா எம்.எல்.ஏ., சிறுமியின் பெற்றோருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி நேற்று ராேஜகவுடா எம்.எல்.ஏ., சிறுமி காணவி கவுடாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து அரசு சார்பில் நிவாரணத்தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.