மின்துறை ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஆலோசித்து முடிவு


மின்துறை ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஆலோசித்து முடிவு
x

பெங்களூரு எச்.எஸ்.ஆர்.லே-அவுட்டில் பெங்களூரு மின்சார வினியோக நிறுவன(பெஸ்காம்) அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

பெங்களூரு:-

கர்நாடகத்தில் முந்தைய அரசுகளின் அறிவியலுக்கு மாறான கொள்கை முடிவுகளால் மின்துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதை சாிசெய்ய நாங்கள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். இது பொய். மின்துறையில் அரசியல் செய்வது சரியல்ல. உண்மைகள் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். மின்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏழைகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்களுக்கு மாதம் 70 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம். கர்நாடக மின்சார வினியோக நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதற்காக அமைக்கப்பட்ட குருசரன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம். மின்துறை ஊழியர்களின் சம்பள உயர்வு அதாவது சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story