அரசு திட்டங்களில் இடம்பெறும் முதல்-மந்திரி புகைப்படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி


அரசு திட்டங்களில் இடம்பெறும் முதல்-மந்திரி புகைப்படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு திட்டங்களில் இடம்பெறும் முதல்-மந்திரி புகைப்படத்திற்கு எதிரான மனு தள்ளுப்படி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் கிரகஜோதி, கிரகலட்சுமி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதுபோன்ற அரசு திட்டங்களில் மந்திரிகளின் புகைப்படங்கள் இடம்பெறுவது, அரசு கஜானாவை காலி செய்யும் முயற்சி என பெலகாவியை சேர்ந்த பீமப்பா என்பவர் குற்றம்சாட்டினார். அவர் இதுதொடர்பாக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பிரசன்னா, கிருஷ்ணா எஸ் தீக்ஷித் ஆகியோர் அமர்வில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், அரசு திட்டங்களில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளின் புகைப்படங்கள் இடம்பெறுவது தவறு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை என கூறி பீமப்பாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story