எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 25 March 2023 10:11 AM IST (Updated: 25 March 2023 11:07 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டப்பிரிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..தண்டனை விதிக்கப்ட்டதும் தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு 8(3)- ஐ சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல் செயப்பட்டுள்ளது.


Next Story