பயணிகள் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட்டுகள் வினியோகம்


பயணிகள் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட்டுகள் வினியோகம்
x

கன்னட ராஜ்யோத்சவாவையொட்டி பயணிகள் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோவில் பயணிகள் சுலபமாக பயணிக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் வினியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மெட்ரோவில் பயணம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் செல்போன்களில் 81055-56677-என்ற எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், அவர்கள் அந்த எண்ணில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியவுடன், இந்த சேவை தொடங்கும். அப்போது சாட்டிங் முறையில் வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

காதிதமில்லா கியூ.ஆர். கோடு டிக்கெட்டை அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் டோக்கன் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் குறைவு ஆகும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை சாட்டிங் மூலம் கேட்டு பெற்று கொள்ளலாம். ஒருவேளை டிக்கெட் எடுத்த பின்னர், பயணிக்க விருப்பம் இல்லை என்றால், அந்த டிக்கெட்டை ரத்து செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று (நவம்பர்) 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story