மசூதி ஒலிபெருக்கிகளால் மக்களுக்கு தொந்தரவு


மசூதி ஒலிபெருக்கிகளால் மக்களுக்கு தொந்தரவு
x
தினத்தந்தி 14 March 2023 10:00 AM IST (Updated: 14 March 2023 10:02 AM IST)
t-max-icont-min-icon

மசூதி ஒலிபெருக்கிகளால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

மங்களூரு-

மசூதி ஒலிபெருக்கிகளால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

மசூதி ஒலிபெருக்கிளால் தொந்தரவு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் காவூரில் நடந்த யாத்திரையில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. எங்கள் கட்சிக்கு தேசியவாத முஸ்லிம்களின் வாக்குகள் மட்டுமே தேவை.

மசூதி ஒலிபெருக்கி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கேட்கிறீர்கள். மசூதியில் தொழுகைக்கு (அசன்) பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் உள்பட பலருக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. அந்த ஒலிபெருக்கியால் பாதிக்கப்படும் மக்களின் சார்பாக நான் பேசுகிறேன். மசூதில் உள்ள ஒலிபெருக்கி குறித்து முஸ்லிம் தலைவர்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். நான் எந்த மதத்தையும் அவமரியாதை செய்யவில்லை.

காங்கிரஸ் ஏன் எதிர்க்கவில்லை

காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் செய்த ஊழலை மறைக்க பா.ஜனதா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அவர்கள் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆவணங்களையும் வெளியிடவில்லை. முன்ஜாமீன் பெற்ற மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை நான் எதிர்க்கிறேன்.

இதேபோல், டி.கே.சிவக்குமார் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தபோது அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை காங்கிரஸ் எதிர்க்கவில்லை ஏன்?.

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கிறீர்கள். சட்டசபை தேர்தலில் டிக்கெட் பெறுவது முக்கியமல்ல. நாங்கள் நிச்சயம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். உள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் யாருக்கு டிக்கெட் வழங்குவது என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story