திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் - மூலவருக்கு சிறப்பு பூஜை
தீபாவளியை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.
திருப்பதி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலை முதலே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு இன்று ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. இதையொட்டி, மூலஸ்தானத்தில் உள்ள மூலவருக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்துருளினார். உற்சவமூர்த்திகளுக்கு தீப தூவ நைவேத்திய சமர்ப்பணத்துடன் ஆஸ்தானம் நடைபெற்றது. இந்த ஆஸ்தானம் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story