கட்சியின் சித்தாந்தங்களை மீறி பேசக்கூடாது- ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு, காங்கிரஸ் எச்சரிக்கை
கட்சியின் சித்தாந்தங்களை மீறி பேசக்கூடாது என்று ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு, காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:ஜமீர் அகமது கான் எம்.எல்.ஏ. கட்சியின் சித்தாந்தங்களை மீறி தொடர்ந்து பேசி வருகிறார்.
காங்கிரஸ் சாதி மத பாகுபாடின்றி செயல்படும் கட்சி. கட்சியின் லட்சுமண ரேகை, சித்தாந்தங்களை மீறி இனி ஜமீர் அகமது கான் பேசக்கூடாது. இது அவருக்கு கடைசி எச்சரிக்கை. அவரின் கருத்துக்களால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அவர் தான் சமாளிக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் கூறி உள்ளது.
Related Tags :
Next Story