சாலை பள்ளத்தால் விபத்து டாக்டர் சாவு
சிக்பள்ளாப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது தடுமாறி விழுந்த டாக்டர் உயிரிழந்தார்.
தேவனஹள்ளி:-
பெங்களூருவை சேர்ந்தவர் ஆஷிஸ். இவர் டாக்டர் ஆவார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார். பின்னர், அவர் நந்தி மலைக்கு சென்றுவிட்டு பெங்களூரு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் தேவனஹள்ளி புறநகர் பகுதியில் கோட்டே கிராஸ் அருகே வந்தபோது பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கி, ஏறியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து டாக்டர் ஆஷிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த டாக்டர் ஆஷிஸ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அவரது மோட்டார் சைக்கிள் சிக்கி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.