சிக்கமகளுரு திருவிழாவை நடத்தவேண்டாம்
சிக்கமகளூரு திருவிழாவிற்கு தடை விதிக்கவேண்டும் என்று கலெக்டர் புகார் அளிக்கப்பட்டது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூருவில் ஆண்டு தோறும் மாவட்டம் அளவிலான திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிக்கமகளூரு திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ளுவார்கள். இந்நிலையில் திடீரென்று புதிய வகை கொரோனா தொற்று அனைவரையும் அச்சுறுத்த தொடங்கிவிட்டது. இதனால் திருவிழாவை நடத்தினால் கொரோனா தொற்று அதிகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி இந்த முறை சிக்கமகளூரு திருவிழா நடத்தவேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட துணை கலெக்டரை சந்தித்த அவர்கள் மனு வழங்கினர். அந்த மனுவில் பி.எப்-7 கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிக்கமகளூரு திருவிழா நடத்துவது பொதுமக்களுக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது. வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட கூடும். எனவே சிக்கமகளூரு திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று கூறியிருந்தனர். இந்த மனுவை வாங்கி துணை கலெக்டர் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக கூறினார்.