இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை!


இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை!
x
தினத்தந்தி 3 Dec 2022 9:25 AM IST (Updated: 3 Dec 2022 9:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார்.மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஜியை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் ஒரு பழம்பெரும் தலைவர், அவர் தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக வேரூன்றியவர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார்.

இவ்வாறு தெரிவித்தார்.


Next Story