அசுத்தமான நீர் குடித்த பெண் பரிதாப சாவு


அசுத்தமான நீர் குடித்த   பெண் பரிதாப சாவு
x

அசுத்தமான நீர் குடித்த பெண் பரிதாப பலியானார்..

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா வல்கம்தின்னி கிராமத்தில் அசுத்த தண்ணீரை குடித்த 30 பேருக்கு நேற்று முன்தினம் வாந்தி-மயக்கம் உண்டானது. இதனால் அவர்கள் ராய்ச்சூர் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வல்கம்தின்னி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராய்ச்சூர் டவுனில் அசுத்த நீரை குடித்த 7 பேர் உயிரிழந்த நிலையில், அந்த மாவட்டத்தில் அசுத்த தண்ணீர் குடித்து மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story