பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.5 கோடி போதைப்பொருள் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.5 கோடி போதைப்பொருள் சிக்கியது
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:45 PM GMT)

எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது.

தேவனஹள்ளி:

பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள், தங்கம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் எத்தியோபியாவில் இருந்து வரும் விமானத்தில் ஹெராயின் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.5 கோடி மதிப்பு

அப்போது எத்தியோபியாவில் இருந்து விமானம் ஒன்று பெங்களூருவுக்கு வந்தது. அந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அறைக்கு அழைத்து சென்று, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமையில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story