தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பால் மற்ற சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை குறைக்க அரசு திட்டம்?
தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பால் மற்ற சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை குறைக்க அரசு திட்டம்?
பெங்களூரு: கர்நாடகத்தில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீடுவை அரசு உயர்த்தி உள்ளது. அதாவது தலித் சமூகத்திற்கு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின சமூகத்தின் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கி உள்ளார். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சமூகங்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பா.ஜனதா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், 2 சமூகங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகரித்து இருப்பதால், அதனை சரி செய்யும் விதமாக மற்ற சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இடஒதுக்கீடு 100 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது தலித், பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மற்ற சமூகங்களிடம் இருந்து இடஒதுக்கீடு பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தற்போது 100 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பதிலாக 119 சதவீதமாக இடஒதுக்கீடு உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே இடஒதுக்கீடு விவகாரத்தில் தற்சமயம் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும், பொது சமூகத்தின் இடஒதுக்கீட்டை குறைப்பதால் அரசுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருதுவதாக கூறப்படுகிறது.