காஷ்மீரில் மஞ்சள் நிற பனிப்பொழிவு காரணம் என்ன? வானிலை மையம் விளக்கம்
காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறி உள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறி உள்ளனர். வியாழக்கிழமை இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர்.
ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறும்போது, "நேற்று முன்தினம் இரவில் மஞ்சள் வண்ணம் மற்றும் புழுதிநிறைந்த பனிப்பொழிவு வடக்கு காஷ்மீரில் சில இடங்களில் தென்பட்டது. மத்திய பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வீசிய காற்று அதிகமான தூசுகளை பனிப்பொழிவுடன் கலந்து இந்த மாற்றத்தை உருவாக்கியதாக கணிக்கப்படுகிறது.
செயற்கை கோள் மூலமும் இது படம்பிடிக்கப்பட்டது. இரவு 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த வானிலை மாற்றம் நீடித்தது" என்று குறிப்பிட்டு உள்ளது.
Related Tags :
Next Story