மேற்குவங்காளத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன்


மேற்குவங்காளத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன்
x

மேற்குவங்காளத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் நிலக்கரி கடத்தல் மோசடி அம்பலமானது. இது தொடர்பாக நிலக்கரி நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் அடுத்தடுத்து தெரியவந்தது.

இந்த நிலையில் நிலக்கரி கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை விசாரணைக்காக டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நாளை ஒதுக்கி ஆஜராகுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவர்கள் பணியாற்றிய பகுதியின் வழியாக நிலக்கரி கடத்தலுக்கு அவர்கள் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர். இந்த மோசடி மூலம் அவர்களுக்கு ஆதாயம் கிடைத்ததற்கான சான்றுகள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளது. இவர்களுக்கு கடந்த ஆண்டும் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story