இந்திய விமான படை தளபதியுடன் எகிப்து விமான படை தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை


இந்திய விமான படை தளபதியுடன் எகிப்து விமான படை தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை
x

இந்திய விமான படை தளபதியை எகிப்து நாட்டு விமான படை தளபதி இன்று சந்தித்து இரு விமான படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.



புதுடெல்லி,



இந்திய விமான படை தளபதி வி.ஆர். சவுத்ரியை டெல்லியில், எகிப்து நாட்டின் விமான படை தளபதி முகமது அப்பாஸ் ஹெல்மி முகமது ஹேசம் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இரு நாட்டு விமான படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பில், உக்ரைன் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள, மண்டல பாதுகாப்பு சூழ்நிலை பற்றியும் இரு பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொண்டனர்.

இதுபற்றி இந்திய விமான படை டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பரஸ்பர விருப்பம் பற்றிய இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இரு தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர் என தெரிவித்து உள்ளது. இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவையும், எகிப்து விமான படை தளபதி ஹேசம் இன்று சந்தித்து பேசியுள்ளார்.


Next Story