ஏக்நாத் ஷிண்டேவின் முதல் மந்திரி பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகும்: உத்தவ் தாக்கரே தரப்பு


ஏக்நாத் ஷிண்டேவின் முதல் மந்திரி பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகும்: உத்தவ் தாக்கரே தரப்பு
x

ஷிண்டே எந்த நேரமும் முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கப்படுவார் என்று சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா உடைந்துள்ளது. இரு அணிகளும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி வருகிறது.

இந்த நிலையில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பா.ஜனதா செல்ல தயாராக இருப்பதாக சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஷிண்டே அணியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் புதிய அணியை அமைப்பார்கள். அந்த அணி பா.ஜனதாவுடன் இணையும். ஷிண்டே - பா.ஜனதா அரசு ஒது தற்காலிக ஏற்பாடு தான். ஷிண்டே எந்த நேரமும் முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story