குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!


குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
x
தினத்தந்தி 3 Nov 2022 2:35 AM GMT (Updated: 3 Nov 2022 4:51 AM GMT)

குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைவதால் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதிஅறிவித்தது. அதன்படி நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.


Next Story