அறிவிப்புக்கு முன்பே சித்தராமையா முதல்-மந்திரி என கூறிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு நோட்டீஸ்


அறிவிப்புக்கு முன்பே சித்தராமையா முதல்-மந்திரி என கூறிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு நோட்டீஸ்
x

அறிவிப்புக்கு முன்னரே சித்தராமையா முதல்-மந்திரி என கூறிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரசில், முதல்-மந்திரி பதவிக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் முதல்-மந்திரி பதவியை கேட்பதால் முதல்-மந்திரியை அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வு செய்திருப்பதாக செய்தி தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானது. மேலும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் டாக்டர் புஷ்பா அமர்நாத், அசோக் பட்டன் ஆகியோர், முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக பேட்டியும் அளித்து இருந்தனர். அதாவது காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி தேர்வு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே இவர்கள் பேட்டி அளித்திருந்தனர்.

இந்த நிலையில், முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தன்னிச்சையாக பேட்டி அளிக்க கூடாது என்றும், இதை மீறுவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் கருத்துக்கூறிய புஷ்பா அமர்நாத், அசோக் பட்டன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story