மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
தரிகெரே அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ஸ்ரீராமர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 40). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. இந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனை அவர் கவனிக்காமல் மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தரிகெரே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சுரேசின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.