உலகில் 10 பேருக்கு மட்டுமே இருக்கும் அரிய ரத்தவகை - இந்தியாவில் ஒருவருக்கு கண்டுபிடிப்பு


உலகில் 10 பேருக்கு மட்டுமே இருக்கும் அரிய ரத்தவகை - இந்தியாவில் ஒருவருக்கு கண்டுபிடிப்பு
x

Image Courtesy : AFP (Representative Image)

அரிதான இந்த ரத்த வகையுடன் இந்தியாவில் ஒருவர் மட்டுமே உள்ளார்.

அகமதாபாத்,

குஜராத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஒருவருக்கு அரிய இரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. "இஎம்எம்" (EMM) நெகட்டிவ் என்ற அந்த ரத்த வகையை மற்ற நான்கு இரத்த வகைகளான ஏ, பி, ஓ, அல்லது ஏபி உடன் வகைப்படுத்த முடியாது.

குஜராத்தில் முதியவருக்கு இந்த ரத்த வகை கண்டறிப்படுவதற்கு முன்பு வரை இந்த ரத்த வகையுடன் உலகில் 9 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது அந்த முதியவருடன் சேர்த்து 10 பேர்கள் உள்ளனர். அதிலும் இந்த ரத்த வகையுடன் இந்தியாவில் இவர் மட்டுமே உள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு அகமதாபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவருக்கு இதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள பிரதாமா ஆய்வகத்தில் அவரது இரத்த வகையை அடையாளம் காண முடியாததால், மாதிரிகள் சூரத் இரத்த தான மையத்திற்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவரின் ரத்த வகை இஎம்எம் நெகட்டிவ் என கண்டறிப்பட்டது.


Next Story