"ஸ்கேன் மையத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற ஊழியர்கள்" - கோபமடைந்த தமிழிசை சௌந்தரராஜன்


ஸ்கேன் மையத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற ஊழியர்கள் - கோபமடைந்த தமிழிசை சௌந்தரராஜன்
x

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற ஊழியர்களுக்கு துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு பெண்மணி தனது கணவருக்கு 3 நாள்களாக ஸ்கேன் எடுக்காமல் இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜனிடம் முறையிட்டார்.

இதையடுத்து, ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது அந்த அறை பூட்டியிருந்தது. அதற்கு அதிகாரிகள், ஸ்கேன் மைய ஊழியர்கள் அறையை பூட்டி சாவியை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த தமிழிசை சௌந்தரராஜன், ஊழியர்களுக்கு அந்த அளவிற்கு அலட்சியாம்? என எச்சரிக்கை விடுத்தார்.


Next Story