சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; சஞ்சய் ராவத்தை ஜாமீனில் விட அமலாக்கத்துறை எதிர்ப்பு
பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்தை ஜாமீனில் விட அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பை கோரேகாவ் சித்தார்த் நகர் பகுதியில் பத்ரா சால் உள்ளது. இந்த பகுதியை சீரமைக்க நடந்த குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் பணப்பலன் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. எனவே இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
தற்போது சஞ்சய் ராவத் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான வழக்கு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதுக்கான மிக சிறந்த உதாரணம் என்றார்.இந்தநிலையில் சஞ்சய் ராவத்திற்கு ஜாமீன் கொடுக்க அமலாக்கத்துறை கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டேவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அதில் உள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை.