அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்


அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
x

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும் திமுக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் "அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story