விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்கள் மீட்பு


விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட   8 இளம்பெண்கள் மீட்பு
x

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

பெங்ளூரு: பெங்ளூரு ஜே.பி.நகர் 5-வது பேஸ், இந்திராநகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த 2 மசாஜ் சென்டர்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 2 மசாஜ் சென்டர்களிலும் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் விட்டனர். சம்பவம் குறித்து ஜே.பி.நகர், இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story