விடுதியில் புகுந்து என்ஜினீயரின் மடிக்கணினி


விடுதியில் புகுந்து என்ஜினீயரின் மடிக்கணினி
x

மைசூருவில் விடுதியில் புகுந்து என்ஜீனியரின் மடிக்கணியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மைசூரு:-

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது24). இவர் மைசூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக பிரகாஷ் ெஹப்பால் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இந்தநிலையில் பிரகாஷ் நேற்றுமுன்தினம் விடுதியில் இருந்து இரவு வேலைக்கு சென்றார். அப்போது அவர் மடிக்கணினி, பணப்பையை மறந்து விடுதியில் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திரும்ப விடுதிக்கு பிரகாஷ் வந்தார். அப்போது அவரது அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மடிக்கணினி, பணப்பையை காணவில்லை.

அதில் ரூ.3 ஆயிரம் ரொக்கம், கிரெடிட் கார்டு, பான்கார்டு, ஆதார்கார்டு இருந்துள்ளது. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.63 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் ஹெப்பால் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதியின் அறையை ஆய்வு செய்தனர். பின்னர் திருட்டு சம்பவம் குறித்து விடுதி ஊழியரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்மநபர் ஒருவர் வருவதும் அவர் பிரகாசின் அறைக்கு சென்றதும் பதிவாகி இருந்தது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story