சுற்றுச்சூழல் ஆர்வலர் சாளுமரத திம்மக்கா பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதி


சுற்றுச்சூழல் ஆர்வலர் சாளுமரத திம்மக்கா பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூச்சுத்திணறலால் அவதி சுற்றுச்சூழல் ஆர்வலர் சாளுமரத திம்மக்கா பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்தவர் சாளுமரத திம்மக்கா (வயது 70). சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். இவரது இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்த நிலையில் சாளுமரத திம்மக்கா தனது வளர்ப்பு மகனுடன் பெங்களூரு மஞ்சுநாத நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்து முதுகு எலும்பில் காயம் அடைந்தார். அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு அவர் ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு சளி தொல்லையும், மூச்சுத்திணறல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பேளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சாளுமரத திம்மக்காவின் வளர்ப்பு மகன் பல்லூர் உமேஷ் கூறுகையில், கடந்த சில வாரமாக சாளுமரத திம்மக்கா பேளூரில் வசித்து வந்தார். அப்பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் அவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் உடல் நலம் குணமாகவில்லை. இதனால் பெங்களூருவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு இல்லை என்றார்.


Next Story