மடிகேரியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை


மடிகேரியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:36+05:30)

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மடிக்கேரியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

குடகு:-

மங்களூரு நாகுரி பகுதியில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து பயங்கரவாதி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டுவெடிப்பில் சிக்கிய பயங்கரவாதி ஷாரிக், குடகிற்கு வந்து சென்றதால், அங்கு எதுவும் குண்டு வைத்துள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மடிகேரியில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மடிகேரியில் பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story