பெங்களூரு-விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு
பெங்களூரு-விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு கன்டோன்மண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண்:08544) விசாகப்பட்டினம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலின் சேவை தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் வருகிற 27-ந் தேதி வரை இயக்கப்பட இருந்த இந்த ரெயில் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படும். இதேபோல் மறுமார்க்கமாக விசாகப்பட்டினம்-பெங்களூரு கன்டோன்மண்ட் (வண்டி எண்:08543) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி வரை இயக்கப்பட இருந்தது. இந்த நிலையில் இந்த ரெயில் சேவையையும் அடுத்த மாதம் 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story