முருடேஸ்வர்-பெங்களூரு வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு
முருடேஸ்வர்-பெங்களூரு வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு
பெங்களூரு:
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு யஸ்வந்தபுரம்- முருடேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இம்மாத இறுதி வரை இந்த சிறப்பு ரெயில் சேவை வழங்கப்பட இருந்தது. ஆனால் கடலோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெங்களூருவில் இருந்து சொந்த பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரெயில் சேவை பயனுள்ளதாக இருப்பதாகவும், இந்த ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் கோரிக்கையை ஏற்று, இருமார்க்கமாக இயங்கும் யஸ்வந்தபுரம்-முருடேஸ்வர் ரெயில் சேவை வருகிற மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி யஸ்வந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமைதோறும் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு முருடேஸ்வரை சென்றடையும். மறுமார்க்கமாக முருடேஸ்வரில் இருந்து ஞாயிறு தோறும் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 4 மணிக்கு யஸ்வந்தபுரத்தை வந்தடையும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.