போலி முத்திரை தாள்கள் விற்ற 11 பேர் கைது


போலி முத்திரை தாள்கள்  விற்ற 11 பேர் கைது
x

போலி முத்திரை தாள்கள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரமன்குப்தா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கந்தையா பவன் வளாகத்தில் உள்ள சில கடைகளில் போலி முத்திரை தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. அந்த தகவலின்பேரில் கந்தையா பவன் வளாகத்தில் உள்ள சில கடைகளில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

அப்போது அங்கு போலி முத்திரை தாள்கள் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டு தெரியவந்தது. இதையடுத்து போலி முத்திரை தாள்களை அச்சடித்து விற்றதாக வெங்கடேஷ், விஸ்வநாத், கார்த்திக், ஷியாம்ராஜ், சசிதர், கரியப்பா, ரவிசங்கர், சிவசங்கரப்பா, குணசேகர், ராகவ், கிஷோர் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 2,664 முத்திரை தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன்மதிப்பு ரூ.1 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுதவிர 119 போலி முத்திரைகள், ரூ.5.11 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 11 பேர் மீதும் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.


Next Story