நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து அசத்திய டாக்டர்


நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து அசத்திய டாக்டர்
x

சிவமொக்காவில் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து அசத்திய டாக்டருக்கு பாராட்டுகள் குவிகிறது.

சிவமொக்கா;

சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தில் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற யோகா தினவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார்.

இந்த நிலையில் சிவமொக்காவில் காஸ்மா கிளப் சார்பில் நடந்த யோகா தினவிழாவில் டாக்டரும், யோகா பயிற்சி நிபுணருமான சசிதரன் என்பவர் கலந்து கொண்டார். பின்னர் அவர், நீச்சல் குளத்தில் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்தார்.

இவருடன் மேலும் சிலர் சேர்ந்து நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்தனர். இதனை வீடியோ, புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நீரில் மிதந்தபடி டாக்டர் சசிதரன் யோகாசனம் செய்வது அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


Next Story