ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 23-ந் தேதி பிரியாவிடை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 23-ந் தேதி    பிரியாவிடை
x
தினத்தந்தி 15 July 2022 11:31 AM IST (Updated: 15 July 2022 11:32 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வரும் 23-ம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு , மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஜனாதிபதிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் அடங்கிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ல் முடிவதால் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் மரியாதை செய்கின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை தரப்படுகிறது.


Next Story