திருமணமான பெண் காதலை ஏற்காததால் 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான பெண் காதலை ஏற்காததால் 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமணமான பெண் காதலை ஏற்காததால் 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

சிக்பள்ளாப்பூர்:

திருமணம் செய்யும்படி தொல்லை

சிக்பள்ளாப்பூர் டவுன் கோட்டே படாவனே பகுதியில் வசித்து வந்தவர் நவீன் (வயது 27). இவரது மனைவி சுப்ரியா (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நவீன் தான் வசித்து வந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். தனது காதல் குறித்து அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் பெயரை தனது நெஞ்சில் நவீன் பச்சை குத்தியும் இருந்தார்.

ஆனால் காதலை ஏற்க அந்த பெண் மறுத்து விட்டார். ஆனாலும் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளும்படியும் பெண்ணுக்கு, நவீன் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இந்த தொடர் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீனுக்கு, அந்த பெண் ஐ லவ் யூ என்று குறுந்தகவல் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து பெண்ணின் வீட்டிற்கு சென்ற நவீன், பெண்ணின் கணவர் முன்பே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண்ணிடம் கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதுதொடர்பாக நவீனுக்கும், பெண்ணின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது. பின்னர் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்தும் நடந்து இருந்தது. இதையடுத்து நவீனின் செல்போன் எண்ணை அந்த பெண் பிளாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட நவீன் நேற்று மதியம் தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருமணம் ஆன பெண் நவீனின் காதலை ஏற்காததாலும், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டதாலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் நவீனின் தாய் காசிக்கு சென்று உள்ளதும், அவர் வசித்த வந்த வீட்டில் நவீன் தனது உயிரை மாய்த்ததும் தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story