ஒரே மரத்தில் தூக்குப்போட்டு தந்தை-மகன்தற்கொலை


ஒரே மரத்தில் தூக்குப்போட்டு தந்தை-மகன்தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குந்துகோலில் கடன் தொல்லையால் ஒரே மரத்தில் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

உப்பள்ளி:

கடன் தொல்லை

தார்வார் மாவட்டம் குந்துகோல் நகரை சேர்ந்தவர் சிவனகவுடா லிங்கப்பா (வயது 60). இவரது மகன் அனில் சிவனகவுடா (30). இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக குந்துகோல் அருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதற்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தனர்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக சரிவர விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

தற்கொலை

மேலும் வங்கிகளில் இருந்து கடனை செலுத்த கோரி நோட்டீசும் வந்ததாக தெரிகிறது. இதனால், அவர்கள் மனமுடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அவர்கள், குந்துகோல் அருகே உள்ள தங்களின் விளைநிலத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் இருவரும் ஒரே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குந்துகோல் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தூக்கில் பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் தந்தையும், மகனும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக குந்துகோல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story