ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
மானியத்தொகை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
குடகு:-
குடகு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கார் வாங்க அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானிய தொகையை கேட்டு சோமவார்பேட்டையை சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மானியத்தொகை வழங்க சிறுபான்மை மேம்பாட்டு கழக அதிகாரிகள் முன் வந்தது. அதன்படி அவர் மானியத்தொகையை வாங்க சென்றபோது, அவரிடம் மடிகேரி சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக அலுவலக உதவியாளர் லதா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசாரின் அறிவுரையின் பேரில் அவர், லதாவை சந்தித்து லஞ்சம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ரூ.10 ஆயிரத்தை அவர், லதாவிடம் கொடுத்தார். அந்த பணத்தை லதா வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் லதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.