போலி ஆவணங்கள் தாக்கல் செய்தவர் சிக்கினார்


போலி ஆவணங்கள் தாக்கல் செய்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க போலி ஆவணங்கள் தாக்கல் செய்தவர் சிக்கினார்.

சிவமொக்கா:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கே.எம். சாலையை சேர்ந்தவர் சுந்தர் ஷெட்டி(வயது 37). கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந் தேதி சிவமொக்கா வினோபாநகர் போலீசார் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக 2 பேரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள கூடுதல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது 2 பேர் தரப்பிலும் ஜாமீன் கோரப்பட்டது. இவர்களுக்கு பிணை வழங்குவதாக சுந்தர ஷெட்டி என்பவர், கையெழுத்திட்டார். மேலும் 2 பேரின் பிணையத்திற்கு தேவையான ஆவணங்களை சுந்தரஷெட்டி கோர்ட்டில் சமர்ப்பித்தார். அப்போது நீதிபதி நிபந்தனை அடிப்படையில் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கினார். இந்த நிபந்தனைகளை 2 பேரும் மீறியுள்ளனர். முறையாக விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. போலீசார் அவர்களை தேடும்போது, பிணை பத்திரம் வழங்கிய சுந்தர் ஷெட்டியின் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அதில் போலியான சொத்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தர் ஷெட்டி மோசடி செய்ததை உறுதி செய்த ஜெயநகர் போலீசார் சுந்தர் ஷெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story