அசாம்: வீட்டில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


அசாம்: வீட்டில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x

அசாமின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தர்ராங்,

அசாமின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இன்று அதிகாலை டல்கான் பெசிமாரி பகுதியில் நூர் ஜமால் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. விரைவில் தீ அருகிலுள்ள மற்ற மூன்று வீடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாயின. பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story