டெல்லி: ரோகினி பகுதியில் நிகழ்ச்சி அரங்கில் பயங்கர தீ விபத்து
டெல்லியில் உள்ள ரோகினி பகுதியில் உள்ள விருந்து மண்டபம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ரோகினி செக்டர் 3 பகுதியில் உள்ள விருந்து மண்டபம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக பரவியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.
விபத்து குறித்து 2.30 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியதால் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story