மெழுகுவர்த்தி உற்பத்தி குடோனில் தீ விபத்து
மெழுகுவர்த்தி உற்பத்தி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
மங்களூரு-
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா அட்டூர் பகுதியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறாாக்ள். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக மெழு வர்த்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி குடோன் அமைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மெழுகு வர்த்தி குடோனில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த ஆலய நிர்வாகிகள் தண்ணீர் ஊற்றி அந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பிய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதில் ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெழுகு வர்த்தி மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து கார்கலா புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.