ஆந்திராவில் பட்டாசு கடை தீ விபத்து; 2 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் பட்டாசு கடை தீ விபத்து; 2 பேர் உடல் கருகி பலி
x

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தீபாவளியையொட்டி ஒரு மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமராவதி,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தீபாவளியையொட்டி ஒரு மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு அதிகாலை ஒரு பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்தது. அதில் பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. தீ மேலும் 2 கடைகளுக்கு பரவியது. அதில் 2 பேர் உடல் கருகி பலியானார்கள்.

தகவல் அறிந்து விரைந்து வந்த 4 தீயணைப்பு வீரா்கள், தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் அணைத்தனா். ஆனால் இந்த தீ விபத்தில் 3 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன.

பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ள மைதானத்துக்கு நேர் எதிரே ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. தீ அங்கு பரவியிருந்தால் பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கும். எனவே அங்கு பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு எதிராக பகுதிவாசிகள் முழக்கங்களை எழுப்பினர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story