டெல்லி சாகேத் கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு - பெண் காயம்


டெல்லி சாகேத் கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு - பெண் காயம்
x

டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வழக்கறிஞர் உடையில் வந்து துப்பாக்சூடு நடத்தியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

காயமடைந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடைபெற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் துப்பாக்கிசூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story